மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
காதல் மனைவி கழுத்தை நெரித்து கொலை.. போனில் மர்ம நபரிடம் சிரித்து பேசியதால் பயங்கரம்..!
ஆசை ஆசையாய் காதலித்து திருமணம் செய்த மனைவியை கழுத்தை நெரித்து கொலை செய்த கணவனின் பயங்கர செயல் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள வெட்டூரணி மடம் பகுதியை சேர்ந்தவர் ஆண்டனி. இவரின் மனைவி பத்மா. தம்பதிகள் காதல் திருமணம் செய்துகொண்டுள்ளார்.
இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை பத்மா வீட்டில் சடலமாக இருந்துள்ளார். இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்து அக்கம் பக்கத்தினர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் பத்மாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துவிட்டு, இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
விசாரணையின் போதே பத்மாவின் கணவர் ஆண்டனி காவல் நிலையத்தில் சரணடைந்தார். அவரிடம் அதிகாரிகள் நடத்திய விசாரணையில், இருவரும் விவகாரத்திற்கு விண்ணப்பித்து இருக்கின்றனர்.
அப்போது, பத்மா யாரிடமோ போனில் பேசிவந்த நிலையில், சம்பவத்தன்று எழுந்த தகராறில் ஆண்டனி காதல் மனைவியை கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார் என்பது அம்பலமானது. ஆண்டனியை கைது செய்த காவல் துறையினர் சிறையில் அடைத்தனர்.