மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
காதலனை மணந்து, பெற்றோருக்கு வாட்ஸப்பில் புகைப்படம் அனுப்பி ஷாக் கொடுத்த மகள்.. பரிதவிப்பில் பெற்றோர்.!
வீட்டில் இருந்து ஓட்டம் பிடித்து காதலனை மணந்த கல்லூரி மாணவி, தனது திருமணம் புகைப்படத்தை பெற்றோருக்கு அனுப்பி வைத்த சம்பவம் நடந்துள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மார்த்தாண்டம், கரவிளாகம் பகுதியை சேர்ந்த 47 வயது நபர், மதுபானக்கடையில் பணியாற்றி வருகிறார். இவருக்கு 2 மகள்கள் உள்ள நிலையில், இரண்டாவது மகளுக்கு 18 வயது ஆகிறது. இவர் கல்லூரியில் இரண்டாம் வருடம் பயின்று வருகிறார்.
கல்லூரியில் இரண்டாம் வருடம் பயின்று வந்த மாணவியும், தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வரும் டிப்ளமோ படித்த 25 வயது வாலிபரும் காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில், கல்லூரிக்கு சென்ற மாணவி மீண்டும் வீட்டிற்கு வரவில்லை.
இதனால் பதறிப்போன பெற்றோர் மகளை பல இடங்களில் தேடி அலைந்தும் காணாததால், மார்த்தாண்டம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இந்த விஷயம் தொடர்பாக காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், மாணவி பெற்றோருக்கு வாட்சப் மூலமாக தகவல் அனுப்பியுள்ளார்.
அந்த தகவலில், மாணவி காதலனுடன் கோழிக்கோட்டில் இருப்பதாகவும், அங்குள்ள கிருஷ்ணன் கோவிலில் நாங்கள் இருவரும் திருமணம் செய்துகொண்டோம் என்றும் தெரிவித்துள்ளார். மேலும், நாங்கள் இருவரும் கணவன் - மனைவியாக வாழப்போகிறோம், நீங்கள் திருமணத்திற்கு சம்மதம் தெரிவிக்கமாட்டீர்கள் என்ற காரணத்தால், சுயமாக முடிவை எடுத்துவிட்டேன், அப்பா, அம்மா என்னை மன்னிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.