மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
மனைவி, 3 குழந்தைகள் இருந்தும் 18 வயது இளம்பெண் மீது ஆசை; போலித்திருமணம் செய்த ஆட்டோ ஓட்டுநர் அதிரடி கைது.!
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மார்த்தாண்டம், கொடுங்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் விஜயகுமார் (வயது 32), ஆட்டோ ஓட்டுநராக வேலை பார்க்கிறார். இவருக்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் 3 குழந்தைகள் இருக்கிறார்கள்.
தற்போது கருத்து வேறுபாடு காரணமாக மனைவியை பிரிந்து குழந்தைகளுடன் தாய் வீட்டில் விஜயகுமார் வசித்து வருகிறார். இதற்கிடையில், விஜய்குமார் தனக்கு விவாகரத்து ஆகிவிட்டதாக கூறி, 18 வயது இளம்பெண் ஒருவரை மதபோதகர் பிரின்ஸ் என்பவரின் உதவியோடு இரண்டாவது திருமணம் செய்துள்ளார்.
இதற்கிடையே தனது மகளை காணவில்லை என்று கூறி இளம்பெண்ணின் தாயார் புகார் அளித்த நிலையில், விஜயகுமாரின் முதல் மனைவியிடம் விசாரணை நடத்திய போது இருவரும் விவாகரத்து செய்யவில்லை என்பது அம்பலமானது.
காவல் துறையினர் இருவரையும் தேடிவந்த நிலையில், வேளாங்கண்ணியில் இவர்கள் தங்கி இருப்பதாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள், விஜயகுமாரை கைது செய்தனர். இளம்பெண் மீட்கப்பட்டார். இருவருக்கும் திருமணம் செய்து வைத்த மதபோதகருக்கு வலைவீசப்பட்டுள்ளது.