மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
என் செல்வமே.. உன் படிப்பு கூட முடியலையே.. கதறியழுத தந்தை, நகையை கழற்றிக்கொடுத்து சென்ற மகள்.!
கல்லூரி படிக்கும் வயதில் காதலில் விழுந்த மாணவி, காதலனை பெற்றோரின் எதிர்ப்பை மீறி கரம்பிடித்தார். விஷயம் காவல் நிலையம் வரை சென்று, இறுதியில் பெண் கணவருடன் புறப்பட்டு சென்றார்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மார்த்தாண்டம், கரவிளாகம் பகுதியை சார்ந்தவர் இராமச்சந்திரன். இவரது மகன் சஜின் (வயது 25). இவர் அப்பகுதியில் உள்ள கடையில் பணியாற்றி வருகிறார். இந்த கடைக்கு, கருங்கல் பகுதியை சார்ந்த இராஜேந்திரன் என்பவரது மகள் அபிஷா (வயது 21), கல்லூரிக்கு தேவையான பொருட்களை அவ்வப்போது வந்து வாங்கி செல்வார்.
இந்த தருணத்தால், சஜின் - அபிஷா இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. அபிஷா கல்லூரியில் 2 ஆம் வருடமே பயின்று வரும் நிலையில், இருவருக்கும் நட்பு மலர்ந்து பின்னாளில் காதலாக துளிர்விட்டுள்ளது. இருவரும் கடந்த ஒன்றரை வருடமாக காதலித்து வந்துள்ளனர். இந்த காதல் விவகாரம் அபிஷாவின் பெற்றோருக்கு தெரியவரவே, பெற்றோர் படிக்கும் வயதில் காதல் வேண்டாம் என்று கண்டித்து, அவரின் செல்போனையும் வாங்கி வைத்துள்ளனர்.
செல்போன் இல்லாமல் காதலனுடன் பேச முடியாது என்பதால் அபிஷா தவித்துப்போக, பெற்றோர்கள் வெளியே செல்லும் நேரத்திற்காக காத்திருந்த காதல் புறா, நேற்று முன்தினம் பெற்றோர்கள் வெளியே சென்றதும் பக்கத்து வீட்டாரிடம் செல்போன் கடனுக்கு வாங்கி சஜினுக்கு தொடர்பு கொண்டு விஷயத்தை தெரிவித்துள்ளது. மேலும், தன்னை உடனடியாக திருமணம் செய்துகொள்ள வேண்டும், இல்லையேல் தற்கொலை தான் எனவும் கூறியுள்ளது.
இதனையடுத்து, சஜின் தனது இருசக்கர வாகனத்தில் விரைந்து வந்து அபிஷாவை கரவிளாகத்துக்கு அழைத்து சென்று, அங்கு நண்பர்களின் முன்னிலையில் கோவிலில் வைத்து திருமணம் செய்துகொண்டார். பின்னர், இருவரும் மார்த்தாண்டம் காவல் நிலையத்திற்கு மாலையும், கழுத்துமாக சென்று தஞ்சம் புகுந்துகொண்டனர். காவல் அதிகாரிகளிடம் தங்களுக்கு பாதுகாப்பு கேட்டும் கோரிக்கை வைத்தனர்.
காதல் ஜோடியிடம் புகாரை பெற்றுக்கொண்ட மார்த்தாண்டம் காவல் ஆய்வாளர் செந்தில் வேல்குமார், இருதரப்பு பெற்றோரையும் நேரில் அழைத்து பேசியுள்ளனர். அபிஷாவின் பெற்றோர் மகளின் படிப்பு முடிந்ததும் திருமணம் குறித்து பார்க்கலாம் என்று பேசி கெஞ்சி இருக்கின்றனர். இதனை காதில் ஏற்றுக்கொள்ளாத அபிஷா, கணவருடன் செல்வதில் உறுதியாக இருந்துள்ளார்.
பெற்றோர்கள் கண்ணீருடன் கெஞ்ச, அபிஷா மறுக்க என காவல் நிலையமே பரபரப்பான நிலையில், ஒருகட்டத்தில் ஆத்திரமடைந்த பெற்றோர் அபிஷாவிடம் இருந்த நகைகளை கேட்க, அபிஷாவும் காவல் அதிகாரிகள் முன்னர் நகைகளை கழற்றி பெற்றோரிடம் கொடுத்தார். பின்னர், காதல் ஜோடி புறப்பட்டு சென்றது.
படித்து பட்டம் வாங்கிவிடுவார் என்று பெரும் எதிர்பார்ப்பில் இருந்த பெண்ணின் தந்தை, இன்று அவள் சென்றிருக்கலாம். நாளை எதோ ஓர் சூழ்நிலையில் கஷ்டம் என்று வந்தால், அவரின் நகையை கொடுத்து அவரது வாழ்க்கையை பார்க்கசொல்லிக்கொள்ளலாம். இன்று அவளுக்கு விபரம் புரியாது. வா செல்லலாம் என்று கண்ணீர் வடித்தபடியே மனைவியை சமாதானம் செய்து அழைத்து சென்றார்.