மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
மகளுக்கு திருமணம் செய்துவைக்க இயலாத விரக்தி; விஷம் அருந்தி தற்கொலை செய்துகொண்ட கொத்தனார்.. குடும்பமே கண்ணீர்.!
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கக்கானுர் கிராமத்தை சார்ந்தவர் பேச்சிநாத பிள்ளை. இவர் கொத்தனார் வேலை பார்த்து வருகிறார். பேச்சிநாதனின் மனைவி ராஜேஸ்வரி.
தம்பதிகளுக்கு தாமோதரன் என்ற மகளும், ஈஸ்வர பிரியா என்ற மகளும் இருக்கின்றனர். மகளுக்கு திருமண வயது எட்டிவிட்டதால் திருமணம் செய்ய ஏற்பாடுகளை செய்து வந்தாலும், அவரால் மகளுக்கு திருமணம் செய்து வைக்க முடியவில்லை.
இதனால் அடிக்கடி தனது குடும்பத்தினரிடம் இதை கூறி புலம்பி வந்திருக்கிறார். இந்நிலையில், கடந்த கால நாட்களாகவே மன உளைச்சலில் இருந்து வந்த அவர், வீட்டில் இருந்து புறப்பட்டு சென்று புரப்பிவிளை பகுதியில் விஷம் குடித்து மயங்கி கிடந்துள்ளார்.
அவரை மீட்ட பொதுமக்கள் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்த நிலையில், அவர் அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.