திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
மின்தடையை சரிசெய்யச்சென்ற மின்வாரிய ஊழியர் மரணம்; மின்கம்பத்தில் இருந்து தவறி விழுந்து பரிதாபம்.!
File Photo
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மாத்தூரை சார்ந்தவர் ஷாஜி (வயது 34). இவர் மின்வாரிய ஊழியர் ஆவார். நேற்று இரவு நேரத்தில் அங்குள்ள ஒரு பகுதியில் மின்தடை ஏற்பட்டுள்ளது.
மின்தடையை சரி செய்ய மின்கம்பத்தில் ஷாஜி ஏறி இருக்கிறார். அப்போது அவருக்கு திடீரென உடல் குறைவு ஏற்பட்டு அங்கேயே மயங்கி விழுந்துள்ளார்.
அருகில் இருந்தவர்கள் அவரை மீண்டும் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற நிலையில், அங்கு அவர் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டது.
இதனையடுத்து இந்த விஷயம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மின்தடையை சரிசெய்ய வந்த மின்வாரிய ஊழியர் உயிரிழந்தது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.