திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
போதைக்கு அடிமையான மகனால் நடந்த விபரீதம்; பெற்ற தாயை உயிருடன் கொளுத்தி கொன்ற மகன்.!
கன்னியாகுமாரி மாவட்டத்தில் உள்ள கேரளா - தமிழ்நாடு எல்லை, வெள்ளறடை காற்றாடி பகுதியில் வசித்து வருபவர் நளினி (வயது 60). இவரின் மகன் மோசஸ். இவர் சரிவர வேலைகளுக்கு செல்லாமல் போதைப்பழக்கத்திற்கு அடிமையாக இருந்துள்ளார்.
போக்ஸோ உட்பட குற்றவழக்கிலும் சிக்கி இருக்கிறார். இந்நிலையில், சம்பவத்தன்று தாய் - மகன் இடையே தகராறு நடந்துள்ளது. அப்போது, ஆத்திரமடைந்த மோசஸ், தாயை போதகயில் வீட்டிற்குள் கட்டிப்போட்டு தீ வைத்து கொளுத்தி இருக்கிறார்.
உடலில் தீ பரவி அலறிய நளினியின் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர், அவரை மீட்பதற்குள் உடல் கருகி உயிர் பறிபோனது. இந்த விஷயம் தொடர்பாக வெள்ளறடை காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் நளினியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து மோசஸை கைது செய்தனர்.