மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
மாலை அணிவித்து பள்ளிக்கு வந்த மாணவனை வீட்டிற்கு அனுப்பிய ஆசிரியர்; பெற்றோர் கொந்தளிப்பு.!
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் மாநகராட்சியில் அரசுப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் படித்து வரும் 10ம் வகுப்பு மாணவன், குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் கோவிலுக்கு செல்ல விரதம் இருந்துள்ளார். இதற்கு கழுத்தில் மாலை, காதில் கம்மல், காலில் கொலுசு போன்றவற்றை அணிந்து பள்ளிக்கு சென்றுள்ளார்.
இதனைக்கண்ட ஆசிரியர் மாணவனை கம்மல், கொலுசு, மாலை போன்றவற்றை கழற்றி வைத்து பள்ளிக்கு வருமாறு அறிவுறுத்தி இருக்கிறார். இதற்கு மாணவன் மறுப்பு தெரிவிக்கவே, ஆசிரியர் மாணவனை வகுப்பறையில் இருந்து வெளியேற்றி இருக்கிறார். இதனால் பள்ளியில் இருந்து வீட்டிற்கு சென்ற மாணவன் பெற்றோரிடம் தகவலை தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து, பள்ளிக்கு வந்த பெற்றோர் மாணவன் விரதம் இருப்பதால் எதுவும் செய்ய இயலாது என்று கூறியுள்ளனர். இதனால் ஆசிரியர் - பெற்றோர் இடையே வாக்குவாதம் நடந்துள்ளது. இதுகுறித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகவே, ஒருதரப்பு மாணவருக்கு ஆதரவாகவும், ஒருதரப்பு எதிர்ப்பாகவும் பேசி வருகிறது.