மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அரசு பேருந்து - 2 வீலர் மோதி பயங்கர விபத்து.. நண்பர்கள் 2 பேர் துடிதுடித்து மரணம்.!
பேருந்து நிலையத்திற்குள் டீ குடிக்க சென்ற நண்பர்கள் 2 பேர் விபத்தில் சிக்கி பரிதாபமாக பலியாகினர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் வடிவீஸ்வரம், அழகம்மன் கோவில் பகுதியை சார்ந்தவர் காமேஷ் பாண்டியராஜன் (வயது 26). கேரளா மாநிலத்தை சார்ந்தவர் நிஜோமோன் (வயது 21). இவர்கள் இருவரும் நாகர்கோவிலில் இருக்கும் ஆயுர்வேத மருத்துவமனையில் மருத்துவ பிரதிநிதியாக பணியாற்றி வருகிறார். வடிவீஸ்வரம் தளவாய் தெருவை சார்ந்தவர் தமிழ்செல்வன் (வயது 21). இவர்கள் மூவரும் நண்பர்கள்.
நேற்று இரவு நேரத்தில் மூவரும் வடசேரி பேருந்து நிலையத்திற்கு அருகே உள்ள டீ கடைக்கு இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டு இருந்தனர். தமிழ்செல்வன் வாகனத்தை இயக்கிய நிலையில், டீ குடித்துவிட்டு மீண்டும் இருசக்கர வாகனத்தில் புறப்பட்டுள்ளனர். பேருந்து நிலையத்தை விட்டு வெளியே வருகையில், தூத்துக்குடியில் இருந்து மார்த்தாண்டம் நோக்கி வந்த அரசு பேருந்து, வடசேரி பேருந்து நிலையத்திற்குள் வந்துள்ளது.
பேருந்து ஓட்டுநர் ஒருவழிப்பாதையில் வந்ததால், எதிரே வந்த இருசக்கர வாகனம் மீது மோதி விபத்து ஏற்பட்டது. விபத்தில், காமேஷ் பாண்டியராஜன், தமிழ்செல்வன் மற்றும் நிஜோமோன் ஆகிய 3 பேரும் வாகனத்தில் இருந்து தூக்கி வீசப்பட்டனர். விபத்தை கண்டு பொதுமக்கள் திரண்ட நிலையில், காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள், உயிருக்கு போராடிய மூவரையும் மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பாண்டியராஜன் மற்றும் தமிழ்செல்வன் சிகிச்சை பலனின்றி அடுத்தடுத்து பரிதாபமாக பலியாகினர். நிஜோமோனுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
விபத்தை ஏற்படுத்திய அரசு பேருந்து ஓட்டுனரிடம் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், இந்த நிகழ்வு பகுதியில் பேரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், நண்பர்களின் மறைவை அறிந்த உறவினர்களும், அவர்களின் நண்பர்களும் மருத்துவமனை வளாகத்தில் கண்ணீருடன் திரண்டனர்.