மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
#BigBreaking: இன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை: கனமழை தொடருவதால் ஆட்சியர் அறிவிப்பு.!
காலாண்டு விடுமுறை முடிந்து தமிழகத்தில் இன்று ஆறாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படுகின்றன.
இதனால் வெளியூர் சென்ற மாணவ-மாணவியர்கள் நேற்று இரவே வீடு திரும்பியிருந்தனர்.
இந்த நிலையில், தற்போது கன்னியாகுமரி மாவட்டத்தில் கனமழை வெளுத்து வாங்கி வருவதால், மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
அதேபோல திருநெல்வேலி, தென்காசி, ராணிப்பேட்டை மாவட்டத்திலும் மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருக்கிறது. கன்னியகுமாரி மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் பள்ளிகளுக்கு விடுமுறை வழங்கி உத்தரவிட்டுள்ளார்.