மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பெங்களூரில் தமிழனுக்கு புளிப்பு மிட்டாய் கொடுத்த ஆட்டோ ஓட்டுநர்.. ரூ.20 க்கு இணங்கி 400 லாஸ்.. குமுறலோ குமுறல்..!
கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூரில் பல சுற்றுலாத்தலங்கள் இருக்கின்றன. இவற்றை நாம் காணுவதற்கு கோடைகாலங்களில் செல்லலாம். கோடையிலும் குளுகுளுவென இருக்கும் பெங்களூரை பலரும் சுற்றிப்பார்க்க செல்வார்கள்.
அங்குள்ள ஆட்டோ ஓட்டுனர்களை பொறுத்தமட்டில், சட்டதிட்டங்களின் கடுமை காரணமாக பெரும்பாலும் மீட்டர் உபயோகம் செய்யப்படும். ஆனால், புதிதாக செல்லும் சுற்றுலா பயணிகளை குறிவைத்து நூதன மோசடியும் நடைபெறும். முகநூலில் Driving Tamizha என்ற பக்கத்தின் அட்மின்கள் சமீபத்தில் பெங்களூர் சென்ற நிலையில், அவர்களை ஆட்டோ ஓட்டுநர் ஏமாற்றிய சம்பவம் நடந்துள்ளது.
ஆட்டோவில் பயணிக்க ரூ.20 போதும் என்று அழைத்தவர், அவர்களிடம் பேச்சுக்கொடுத்தவாறு ரூமுக்கு சென்று விடுகிறேன் என்று கூறியுள்ளார். குறைந்தபட்ச தொகையாக ரூ.800 முதல் பணமும் கூறப்பட்டுள்ளது.
பின்னர், அவர்களை ரூமுக்கு அழைத்து சென்றபோது நாளுக்கு ரூ.900 என பேசி முடிக்கப்பட்ட நிலையில், அவர்கள் ரூமுக்கான 2 நாள் தொகையை கொடுத்துவிட்டு வெளியே சுற்றிப்பார்க்க செல்லும் போது ரூ.600 க்கு இருப்பது அம்பலமானது.
ஆட்டோ ஓட்டுநர் புதிதாக பெங்களூருக்கு வருவோரை குறிவைத்து நூதன முறையில் ஏமாற்றி இருக்கிறார். அவரின் வலையில் நமது அட்மின்கள் விழுந்துள்ளனர்.