மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
#JustIN: சென்னையில் உள்ள கோவில்களில் குண்டு வெடிக்கும் - மின்னஞ்சலில் பகீர் மிரட்டல்.!
கர்நாடக மாநில முதல்வரின் மின்னஞ்சலுக்கு மிரட்டல் கடிதம் ஒன்று அனுப்பப்பட்டு சர்ச்சை எழுந்தது. இதனால் கர்நாடக மாநிலம் முழுவதும் பாதுகாப்புகள் பலப்படுத்தப்பட்டு இருந்தன.
இந்நிலையில், கர்நாடக மாநில காவல் கட்டுப்பாட்டு அறையின் மின்னஞ்சலுக்கு சென்னையில் உள்ள கோவில்களில் விரைவில் குண்டு வெடிக்கும் என மிரட்டல் விடுத்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் தகவல் உடனடியாக பெங்களூர் காவல்துறையினர் வாயிலாக தமிழக காவல்துறையினருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சென்னை காவல் துறையினர் தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னையில் உள்ள முக்கிய கோவில்களுக்கு பாதுகாப்பு வழங்கவும் உயர் அதிகாரிகள் தரப்பில் உத்தரவிட்டுள்ளதாக காவல் துறையினர் தரப்பில் இருந்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.