மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
என்கூட ஜாலியா இருக்கில்ல பணம் தா.. கள்ளக்காதலியின் கழுத்தை அறுத்து கொன்ற கள்ளக்காதலன்.. பகீர் சம்பவம்.!
மதுபானம் அருந்தவும், செலவுக்கு பணம் கொடுக்கவும் மறுப்பு தெரிவித்த கள்ளக்காதலியை கள்ளக்காதலன் கழுத்தறுத்து கொலை செய்த சம்பவம் நடந்துள்ளது.
கர்நாடக மாநிலத்தில் உள்ள கலபுராகி மாவட்டம், ரோஜா பகுதியை சேர்ந்தவர் சஹானா பேகம் (வயது 36). இவரின் கணவர் சவூதி அரேபியாவில் பணியாற்றி வருகிறார். இதனால் சஹானா பேகம் வீட்டில் தனியே வசித்து வந்துள்ளார்.
சஹானா பேகத்திற்கும் - வாசிம் அக்ரம் (வயது 32) என்ற இளைஞருக்கும் இடையே ஏற்பட்ட பழக்கமானது, பின்னாளில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. இதனால் கள்ளக்காதல் ஜோடி சஹானாவின் வீட்டிலேயே உல்லாசமாக இருந்து வந்துள்ளது.
கடந்த சில நாட்களாகவே மதுபோதையில் கள்ளக்காதலி சஹானாவின் வீட்டிற்கு சென்ற வாசிம், தனது செலவுக்கு பணம் கேட்டு தொந்தரவு செய்து வந்துள்ளார். தன்னால் பணம் கொடுக்க முடியாது என சஹானா மறுத்துள்ளார்.
இந்நிலையில், நேற்று முன்தினமும் கள்ளகாதலியின் வீட்டிற்கு சென்ற வாசிம் அக்ரம், கள்ளக்காதலி சஹானா பேகத்திடம் குடிக்க பணம் கேட்டு தொந்தரவு செய்துள்ளார். அவர் பணம் கொடுக்க மறுக்கவே, ஆத்திரமடைந்த வாசிம் கள்ளகாதலியின் கழுத்தை கத்தியால் அறுத்து கொலை செய்துள்ளார்.
சஹானாவின் அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர், வாசிம்மை மடக்கிப்பிடித்து காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர். மேலும், சஹானாவின் உடலை மீட்ட அதிகாரிகள் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வாசிம்மை கைது செய்த அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளனர்.