#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
குடிபோதையில் பிலிப்ஸ்களுக்குள் தகராறு.. பீர் பாட்டிலால் ஒரே அடி.. நண்பனை போட்டுத்தள்ளிய நட்பு.!
நண்பர்கள் மதுபானம் அருந்த சென்ற இடத்தில் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு கொலை நடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலத்தில் உள்ள மண்டியா மாவட்டம், மளவல்லி கிராமத்தை சேர்ந்தவர் கங்கா என்ற மனு (வயது 30). இவர் கூலித்தொழிலாளி ஆவார். இவர் மதுபானத்திற்கு அடிமையாகி இருந்துள்ளார். நேற்று முன்தினம் கங்கா தனது நண்பர் குமாருடன் மதுபானம் அருந்த பாருக்கு சென்றுள்ளார்.
அப்போது, இருவருக்கும் இடையே மதுபோதையில் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனைக்கண்ட மதுபானக்கடை ஊழியர்கள் 2 போரையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்துள்ளனர். இருவரும் பாரின் பின்புறம் சென்ற நிலையில், அங்கு மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது.
இந்த தகராறு இருவருக்கும் இடையே கைகலப்பாக மாறவே, ஆத்திரமடைந்த குமார் கீழே இருந்த பீர் பாட்டிலை எடுத்து மனுவின் தலையில் ஓங்கி அடித்துள்ளார். தலையில் படுகாயமடைந்த மனு இரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகினார்.
இந்த விஷயம் தொடர்பாக ஹலகூர் காவல் துறையினருக்கு தகவல் தெரியவரவே, சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் மனுவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து குமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.