திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
சுகாதாரத்துறை அதிகாரி திடீர் தற்கொலை: மருத்துவரின் மர்ம மரணத்தை தொடர்ந்து அடுத்த சோகம்.!
கர்நாடக மாநிலத்தில் உள்ள மாண்டியாவை சேர்ந்த மருத்துவர் சதீஷ். இவரின் மீது சட்டவிரோத கருக்கலைப்பு புகார் எழுந்ததாக தெரியவருகிறது. இதுதொடர்பாக விசாரணை நடைபெற்று வந்தபோது தற்கொலை செய்துகொண்டார். அவரின் தற்கொலை குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில், மாண்டியா சுகாதாரத் துறை அதிகாரியாக பணியாற்றி வருபவர் நடராஜ். இவர் பெங்களூரில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். பெங்களுருவில் உள்ள தனது வீட்டில் நடராஜ் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
உடல்நலக்குறைவு காரணமாக விடுப்பில் சென்றிருந்த நடராஜ், இன்று பணிக்கு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்கொலை சம்பவம் நடந்துள்ளது. இந்த இரண்டு விஷயங்களுக்கும் தொடர்பு உள்ளதா? நடராஜ் எதற்காக தற்கொலை செய்துகொண்டார்? என அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.