மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
கணவர் வீட்டிற்கு வருகையில், வீட்டில் இருந்த தலைதெறிக்க ஓடிய 2 பேர்.. இரத்த வெள்ளத்தில் கிடந்த மனைவி..!
கர்நாடக மாநிலத்தில் உள்ள உடுப்பி மணிபால், சிவல்லி கிராமத்தில் வசித்து வருபவர் ராம்நாத் ராய் (வயது 27). இவரின் மனைவி சுமதி. நேற்று ராம்நாத் ராய் வெளியே சென்றிருந்த நிலையில், சுமதி வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது, அங்கு வந்த 2 பேர் தகராறு செய்து, சுமதியை கத்தியால் குத்தி இருக்கின்றனர்.
கத்திக்குத்து காயத்துடன் மயங்கி விழுந்த சுமதியை அரிவாளால் வெட்டி கொலை செய்ய முயற்சித்த நிலையில், வெளியே சென்ற ராம்நாத் வீட்டிற்கு வந்துள்ளார். வீட்டின் கதவு பூட்டப்பட்டு இருந்த நிலையில், கதவை தட்டியபோது 2 பேர் தப்பிச்செல்ல முயற்சித்துள்ளனர். இதனையடுத்து, அக்கம் பக்கத்தினர் உதவியுடன் 2 பேரையும் பிடித்துள்ளனர்.
வீட்டினுள் சென்று பார்த்த போது சுமதி இரத்த வெள்ளத்தில் மயங்கி இருக்க, அவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதி செய்தனர். பின்னர், சிக்கிய 2 பேரையும் காவல் நிலையத்தில் ஒப்படைக்கவே, விசாரணையில் இருவரும் பெங்களூரில் வசித்து வரும் மிதுன் மற்றும் நாகேஷ் என்பது தெரியவந்தது.
இவர்களில் மிதுன் சுமதியின் உறவினராக இருக்கும் நிலையில், முன்விரோதம் காரணமாக கொலை முயற்சி நடந்துள்ளது. 2 பேரையும் கைது செய்த காவல் துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.