எத்தனை முறை தான் சோதனை நடத்துவீர்கள்? இது பெரிய சாதனை..! நக்கலடித்த கார்த்தி சிதம்பரம்.!



karthi chidambaram talk about raid

காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் நிதியமைச்சருமான ப.சிதம்பரம் தொடர்புடைய இடங்களில் சிபிஐ சோதனை நடத்தி வருகிறது. மும்பை, டெல்லி, சென்னையில் உள்ள ப.சிதம்பரம் வீட்டில் சோதனை நடந்து வருகிறது.

இன்று காலை 6 மணி முதல் மொத்தம் 11 இடங்களில் சோதனை நடைபெறுவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. வெளிநாட்டு பணப்பரிவர்த்தனை தொடர்பான வழக்கில் கார்த்தி சிதம்பரத்தின் வீடு உள்ளிட்ட இடங்களில் சோதனை நடைபெறுவதாக சிபிஐ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்தநிலையில்  கார்த்தி சிதம்பரம் தனது ட்விட்டரில், "எத்தனை முறை சோதனை நடந்தது என்பதை நான் மறந்தே விட்டேன். இது கண்டிப்பாக புதிய சாதனையாகவே இருக்கும் என்று நினைக்கிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.