தன் வீட்டில் நடந்த மோசமான சம்பவம்.! நடிகை சீதா போலீசில் பரபரப்பு புகார்.! நடந்தது என்ன?
ஒடிசா ரயில் விபத்து காரணமாக கருணாநிதி பிறந்தநாள் பொதுக்கூட்டம் ரத்து...!!
ஒடிசாவில் நடந்த கோர ரயில் விபத்து காரணமாக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்ள இருக்கும் நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒடிசா மாநிலத்தில் உள்ள பாலசோர் மாவட்டத்தில் பெங்களூரு, சென்னை ரயில்கள் உள்பட மூன்று ரயில்கள் அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளாகியது. இந்த விபத்தில் இதுவரை 233 பயணிகள் உயிரிழந்துள்ளனர் எனவும், 900 பேர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்த கோர ரயில் விபத்து காரணமாக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்ள இருந்த நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் சென்னையில் இன்று மாலை நடைபெற இருந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து முதலமைச்சர் செல்ல இருந்த செம்மொழிப் பூங்காவில் அமைக்கப்பட்டுள்ள மலர்க் கண்காட்சி நிகழ்ச்சியும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
கருணாநிதி நினைவிடத்துக்குச் சென்று மரியாதை செய்யும் நிகழ்ச்சியும்,ஓமந்தூராரில் இருக்கும் சிலைக்கு மரியாதை செலுத்தும் நிகழ்ச்சியும் நடைபெறும் என்று தகவல் வெளியாகி உள்ளது.
இந்நிலையில், இன்று காலை எழிலகத்தில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் ஒடிசா ரயில் விபத்து தொடர்பாக செய்தியாளர்களை சந்திக்கிறார்.