மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
சசிகலா லேசுப்பட்ட ஆளு இல்ல.! காத்திருங்கள்..! ஓப்பனாக பேசிய கருணாஸ்.!
சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்று வந்த சசிகலா நேற்று முந்தினம் விடுதலை செய்யப்பட்டார். ஆனால், அவருக்கு கொரோனா தொற்று மற்றும் உடல் நலக்குறைவு காரணமாக தற்போது பெங்களூரு விக்டோரியா அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்நிலையில் ஆரம்பத்தில் இருந்தே சசிகலா குறித்து அவதூறாக பேசாமல் இருந்து வந்த முக்குலத்தோர் புலிப்படை தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான கருணாஸ் தற்போது அவரது விடுதலைக்கு பின்னர் சசிகலா குறித்து பேசியுள்ளார். அவர் பேசுகையில், கூவத்தூரில் என்ன நடைபெற்றது என்று அங்கிருந்த அனைவருக்கும் தெரியும். சசிகலா பற்றி இன்று கூறுபவர்கள் அன்று என்ன சொன்னார்கள் என்பது அனைத்து ஊடகங்களிலும் உள்ளது.
மேலும், பிரதமர் மோடியின் விருப்பத்திற்கு எதிராக வேறொருவரை தமிழகத்தின் முதல்வராக தீர்மானம் செய்தவர் சசிகலா. எனவே சசிகலாவை எளிதில் எடை போடக்கூடாது. காத்திருங்கள் என்று முக்குலத்தோர் புலிப்படை தலைவரும், திருவாடானை தொகுதி எம்.எல்.ஏ கருணாஸ் கூறினார்.
பிரேமலதா விஜயகாந்த் கருத்து வரவேற்க கூடியது. எடப்பாடி பழனிச்சாமி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர் கிடையாது என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம்தான். ஜெயலலிதா, சசிகலா உருவாக்கிய இந்த ஆட்சிக்கு சிறு இடையூறும் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக நான் மிகவும் கவனமாக இருக்கிறேன். அதனால்தான் இந்த நிமிடம் வரை அதிமுக சட்டமன்ற உறுப்பினராக, அதிமுகவுடன் தோழமையுடன் இருக்கிறோம் என தெரிவித்துள்ளார்.