காந்தாரா 2 திரைப்படம் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு; கொண்டாட்டத்தில் ரசிகர்கள்.!
முக ஸ்டாலின் கண்டிப்பாக மன்னிப்பு கேட்டே ஆகவேண்டும்.! கொந்தளிக்கும் முக்குலத்தோர் புலிப்படை.!
கடந்த அக்டோபர் 30ஆம் தேதி அன்று தெய்வதிருமகன் முத்துராமலிங்கத் தேவரின் 113வது ஜெயந்தி விழா மற்றும் 58வது குரு பூஜை விழா கொண்டாடப்பட்டது. இதனையடுத்து ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகேவுள்ள பசும்பொன் கிராமத்தில் உள்ள முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் அரசியல் தலைவர்கள் மரியாதை செலுத்தினர்.
தேவர் ஜெயந்திவிழா மற்றும் 58வது குரு பூஜை விழாவிற்காக பசும்பொன்னில் உள்ள தேவர் நினைவிடத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். அப்போது அங்கு பசும்பொன் முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் வழங்கிய விபூதியை நெற்றியில் பூசிக் கொள்ளாமல், கழுத்தில் லேசாக தடவிக்கொண்டு விபூதியை ஸ்டாலின் கீழே கொட்டிவிட்டார். இதனால் ஸ்டாலின் தேவரை அவமதித்து விட்டதாக கடும் கண்டங்கள் எழுந்துவருகின்றன.
இந்தநிலையில், முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி விழாவில் கலந்து கொண்ட திமுக தலைவர் முக ஸ்டாலின், விபூதியை பூச மறுத்து விபூதியை கீழே கொட்டி ஒட்டுமொத்த முக்குலத்தோர் சமூகத்தையும் இழிவுப்படுத்தி விட்டார் என கருணாஸ் கண்டம் தெரிவித்துள்ளார். உடனடியாக ஸ்டாலின் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் கருணாஸ் வலியுறுத்தியுள்ளார்.
தேவர் நினைவிடம் என்பது ஆலயம் போன்றது. பெரியார் கூட அடிகளார் வழங்கிய திருநீறை மரியாதை நிமித்தமாக அணிந்து கொண்டார். ஆனால் ஸ்டாலின் பசும்பொன்னில் நிகழ்த்திய சம்பவம் மனதிற்கு மிகுந்த வேதனையை அளிக்கிறது. இதனால் ஸ்டாலின் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் இல்லாவிட்டால் மன்னிப்பு கேட்கும் வரை கண்டனங்களும், ஆர்ப்பாட்டங்களும் முக்குலத்தோர் புலிப்படை சார்பில் நடைபெறும் என தெரிவித்தார்.