மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
10 ஆண்டுகள் கள்ளக்காதல்; ஒரே அடியில் போட்டுத்தள்ளிய கள்ளக்காதலன்.. கரூரில் பதறவைக்கும் சம்பவம்.!
கரூர் மாவட்டத்தில் உள்ள அரசு காலனி, தங்கராஜ் நகரில் வசித்து வருபவர் ரூபித்தா பானு (வயது 50). கணவர் சிராஜுதீன். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு பானுவின் கணவர் உயிரிழந்துவிட்டார்.
தம்பதிகளின் மகளுக்கு திருமணம் முடிந்து, தனது குடும்பத்தோடு வசித்து வருகிறார். கணவரின் இறப்புக்கு பின்பு ரூபிதா பானு ராஜேந்திரன் என்பவருடன் பழகி வந்துள்ளார்.
இந்த பழக்கம் இவர்களுக்கு இடையே கள்ளக்காதலை ஏற்படுத்தியதை தொடர்ந்து, இருவரும் தனிமையில் அடிக்கடி உல்லாசமாக இருந்து வந்துள்ளனர்.
நேற்று காலை பானுவை சந்திக்க ராஜேந்திரன் பானுவின் வீட்டிற்கு சென்றபோது, இருவருக்கும் இடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியுள்ளது.
ஆத்திரமடைந்த ராஜேந்திரன் ரூபிதாவை கீழே தள்ளிவிட, மூச்சுத்திணறல் ஏற்பட்டு அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விஷயம் தொடர்பாக தகவல் அறிந்த காவல் துறையினர், விசாரணை நடத்தி ராஜேந்திரனை கைது செய்தனர்.