விடுதியில் இரவு உணவு சாப்பிட்ட 11ம் வகுப்பு மாணவர் மர்ம மரணம்.. கண்ணீரில் தவிக்கும் பெற்றோர்., கரூரில் அதிர்ச்சி சோகம்.!



Karur Aravakurichi Private School student Santhosh Babu Died 

 

இரவு உணவு சாப்பிட்ட மாணவர் விடுதியில் மயங்கி உயிரிழந்துவிட, பெற்றோரின் புகாரின் பேரில் பள்ளி நிர்வாகத்திடம் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கரூர் மாவட்டத்தில் உள்ள அரவக்குறிச்சி, காக்காவடியில் தனியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் சுற்றுவட்டார கிராமத்தை சேர்ந்த பலரும் பயின்று வருகிறர்கள். பள்ளிக்கென தனியாக விடுதியும் இருக்கின்றது. 

இந்நிலையில், திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வேடசந்தூரை சேர்ந்த சரவணனின் மகன் சந்தோஷ் பாபு (வயது 16), இப்பள்ளியின் விடுதியில் தங்கியிருந்து 11ம் வகுப்பு பயின்று வருகிறார். நேற்று இரவு விடுதியில் கொடுக்கப்பட்ட உணவை சாப்பிட்டு இருக்கிறார். 

இந்த உணவை சாப்பிட்ட சில நிமிடத்திலேயே அவர் மயங்கி விழுந்துவிட, பதறிப்போன சக மாணவர்கள் காப்பாளருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அவர் உடனடியாக மாணவனை மருத்துவமனைக்கு அழைத்து என்றுள்ளார். 

மருத்துவமனையில் மாணவன் சந்தோஷ் பாபுவின் மரணத்தை மருத்துவர்கள் உறுதி செய்துள்ளனர். இந்த விஷயம் தொடர்பாக மாணவனின் தந்தைக்கும் தகவல் தெரிவிக்கப்படவே, அவர் தனது உறவினர்களுடன் கரூருக்கு வந்தார். இதுகுறித்து அரவக்குறிச்சி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. 

முதற்கட்ட அவிசாரணையில், மாணவன் சந்தோஷ் பாபு இரவு உணவு சாப்பிட செல்கையில் வலிப்பு ஏற்பட்டு மயங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணவனின் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில், பிரேத பரிசோதனை அறிக்கை கிடைத்த பின்னரே உண்மை தெரியவரும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.