மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
10 ஆண்டுகளாக 2 இலட்சம் தான்.. ஒன்றரை ஆண்டில் ஒன்றரை இலட்சம் - புள்ளி விபரத்துடன் முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்.!
கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தின் போது ஒட்டுமொத்தமாக 2 இலட்சம் மின் இணைப்புகள் மட்டுமே கொடுக்கப்பட்டுள்ள நிலையில், நமது ஆட்சியில் இன்றுவரை ஒன்றரை இலட்சம் மின் இணைப்புகள் கொடுக்கப்பட்டுள்ளது என முதல்வர் பேசினார்.
கரூர் மாவட்டத்தில் உள்ள அரவக்குறிச்சியில், விவசாய பெருமக்களுக்கு இலவச மின்சாரம் வழங்கும் திட்டமானது தமிழ்நாடு முதல்வர் மு.க ஸ்டாலினால் தொடங்கி வைக்கப்பட்டது.
இந்த திட்டத்தின் தொடக்க விழாவில் நேரில் கலந்துகொண்ட தமிழ்நாடு முதல்வர் மு.க ஸ்டாலின் பயனாளிகளுக்கு இலவச மின்சார திட்டத்தை தொடங்கி வைத்து உரையாற்றினார்.
அப்போது அவர் பேசுகையில், "கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சி ஒன்று நடைபெற்றது. அவர்கள் 10 ஆண்டுகளில் 2 இலட்சம் மின் இணைப்புகளை மட்டுமே கொடுத்தார்கள். ஆனால், நாம் ஆட்சிக்கு வந்து ஒன்றரை ஆண்டு ஆகிவிட்டது.
ஒன்றரை ஆண்டுக்குள் ஒன்றை இலட்சம் விவசாயிகளுக்கு இலவசமாக மின் இணைப்பு கொடுத்துள்ளோம். நம்மை நம்பி வாக்களித்த மக்களுக்கும், வாக்களிக்காத மக்களுக்கும் நாம் நம்பிக்கையுடன் இருக்கிறோம்" என்று தெரிவித்தார்.