திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
உதவி கேட்ட பெண்.. 'பிரசவவலி' எனக்கூறி, நடுக்காட்டில் இழுத்துச்சென்று.. பயங்கரம்.!
ராசிபுரம் பகுதியில் லிப்ட் கேட்ட இளம் பெண் ஒருவர் கொடூரமாக தாக்கப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது.
கரூர் மாவட்டத்தில் வசித்து வந்த கல்லூரி மாணவி ஒருவர் நாமக்கல் மாவட்டத்திலுள்ள ராசிபுரம் அருகே அமைந்திருக்கும் ஒரு கல்லூரியில் முதல் வருடம் இளங்கலை பட்டம் படித்து வருகின்றார். இவர் நேற்று கரூரிலிருந்து ராசிபுரத்திற்கு கல்லூரிக்கு செல்ல கிளம்பியுள்ளார். பேருந்து கிடைக்காமல் கல்லூரிக்கு தாமதமாகிய காரணத்தால் அந்த வழியே வந்த ஒரு இளைஞரிடம் லிப்ட் கேட்டுள்ளார்.
அந்த இளைஞரும் லிப்ட் கொடுக்க அந்த பெண்ணை வாகனத்தில் ஏற்றிக்கொண்டு, சென்றுள்ளார். திடீரென தனது அக்காவுக்கு பிரசவ வலி என்று சொல்லி வாகனத்தை வேறு வழியில் திருப்பியுள்ளார் இளைஞர். அப்போது அருகில் இருந்த ஒரு காட்டுப் பகுதிக்கு பெண்ணை அழைத்துச் சென்றார். அங்கே வாகனத்தை நிறுத்திவிட்டு அந்த பெண்ணை தலையில் தாக்கி அவர் பலவீனமானவுடன் அவரிடம் பாலியல் ரீதியாக அத்து மீறியுள்ளார்.
தொடர்ந்து, அந்தப் பெண் வைத்திருந்த செல்போன், பணம் மற்றும் சில உடைகளை பிடுங்கிக் கொண்டு அந்த நபர் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார். இளம் பெண் கத்தி சத்தம் போட்டவுடன் அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து அவருக்கு உதவி செய்தனர்.
ராசிபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இந்த சம்பவம் பற்றி அவர்கள் புகார் கொடுத்த நிலையில் அங்கிருந்த சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில் தொப்பம்பட்டி ராஜ வீதியில் வசித்து வரும் ஐயப்பன் என்ற மணிகண்டன் தான் இந்த மோசமான செயலில் ஈடுபட்டது என்பது தெரியவந்துள்ளது. இதை அடுத்து அவர் கைது செய்யப்பட்டார்.