மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
3 மாணவிகளிடம் 2 இளைஞர்கள் சில்மிஷம்.. தலைமுடியை பிடித்து இழுத்து, வண்டியை விட்டு ஏத்திடுவேன் என மிரட்டல்.!
பள்ளிக்கு சென்ற மாணவிகளின் முடியை பிடித்து இழுத்து கேலி செய்த 2 பேர் போக்ஸோவில் கைது செய்யப்பட்டனர்.
கரூர் மாவட்டத்தில் உள்ள குளித்தலை, நங்கவரம் பகுதியை சேர்ந்த மாணவிகள், அரசு உதவிபெறும் பள்ளியில் பயின்று வருகின்றனர். இந்த பள்ளியில் பயின்று வந்த 3 மாணவிகள் மிதிவண்டியில் வீட்டிற்கு சென்றுகொண்டு இருந்தனர்.
அப்போது, கொசூர் கம்பளியம்பட்டியை சேர்ந்த வினோத் என்பவர், இனுங்கூரை சேர்ந்த 11 ஆம் வகுப்பு மாணவர் வெங்காயம் விற்பனை செய்து வந்துள்ளனர். 3 மாணவிகள் மிதிவண்டியில் வருவதை கண்ட இருவரும், மாணவிகளின் மிதிவண்டியை இடைமறித்து நிறுத்தியுள்ளனர்.
மாணவிகளின் தலைமுடியை பிடித்து இழுத்து, பாலியல் ரீதியாக தொல்லையளித்த கொடூரர்கள், இதனை வெளியே கூறினால் வண்டியில் ஏற்றி கொலை செய்திடுவோம் என்றும் மிரட்டி இருக்கின்றனர்.
இதனால் பயந்துபோன மாணவிகள் பெற்றோரிடம் விஷயத்தை தெரியப்படுத்த, மாணவிகளின் குடும்பத்தினர் விரைந்து சென்று வினோத் குமார் மற்றும் 11 ஆம் வகுப்பு மாணவனை பிடித்து குளித்தலை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
பெற்றோர்களின் புகாரை தொடர்ந்து, குளித்தலை காவல் துறையினர் போக்ஸோ பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து வினோத் மற்றும் 11 ஆம் வகுப்பு மாணவனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.