திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
ஐசியு-வில் அனுமதியான ஐடி அதிகாரிகள்; அமைச்சரின் தம்பி வீட்டில் குவிக்கப்படும் காவல் படை.!
கரூர் மாவட்டத்தில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமார் வீட்டில், இன்று காலை வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.
இந்த தகவல் அறிந்து வந்த திமுக தொண்டர்கள், வருமான வரித்துறை அதிகாரிகளின் வாகனத்தை தாக்கி சேதப்படுத்தினர். மேலும், பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட 4 ஐடி அதிகாரிகள் படுகாயம் அடைந்தனர்.
அவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதி செய்யப்பட்டனர். அவர்களுக்கு மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.
சம்பவ இடத்தில் நிகழும் பதற்றமான சூழ்நிலை காரணமாக, அசோக் குமாரின் வீட்டு முன்பு அதிரடி படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். திருச்சி சரக டிஐஜி சரவணா சுந்தர் நேரடி கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்.