மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
கரூர் அருகே கல்லூரிக்கு சென்ற நர்சிங் மாணவி.. பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி.. போலீசார் தீவிர விசாரணை.!
கரூர் அருகே கல்லூரிக்கு சென்ற முதலாம் ஆண்டு நர்சிங் மாணவி மாயமாகியுள்ளார்.
கரூர் மாவட்டம் நாகைநல்லூர் பகுதியை சேர்ந்தவர் வைஷ்ணவி. இவரது 16 வயது மகள் விஜயராகினி நர்சிங் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்துள்ளார்.
இந்த நிலையில் சம்பவத்தன்று நர்சிங் மாணவி விஜயராகினி கரூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு பயிற்சிக்கு செல்வதாக தனது தாயிடம் கூறிவிட்டு வீட்டிலிருந்து சென்றுள்ளார்.
ஆனால் இரவு நேரம் ஆகியும் மாணவி விஜயராகினி வீட்டுக்கு திரும்ப வரவில்லை. இதனால் பதற்றம் அடைந்த குடும்பத்தினர் மாணவியின் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் வீடுகளில் தேடி பார்த்தனர். ஆனால் அவர் எங்கேயும் இல்லை.
இதனையடுத்து உடனடியாக அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார் மாணவி விஜயராகினியை தீவிரமாக தேடி வருகின்றனர்.