திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
கள்ளத்தனமாக பயோ டீசல் விற்பனை... அதிரடி நடவடிக்கை எடுத்து ஆப்படித்த அதிகாரிகள்.!
5 ஆயிரம் லிட்டர் பயோடீசல் இருந்த லாரிக்கு எந்தவித ஆவணங்களும், உரிமமும் இல்லாததால் காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
கரூர் மாவட்டத்தின் அருகாமையில் உள்ள தோரணகல்பட்டி பகுதியில் கள்ளத்தனமாக டீசல் விற்பனை செய்யப்படுவதாக வந்த தகவலையடுத்து, நேற்று முன்தினம் இரவு மாவட்ட வழங்கல் அலுவலர் தலைமையில் காவல்துறையினர் அங்கு சென்று ஆய்வு செய்துள்ளனர்.
இந்த நிலையில், அங்கு பதிவு எண் இல்லாத 25 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட ஒரு டேங்கர் லாரியில் இருந்து, மற்றொரு லாரிக்கு டீசல் நிரப்பி கொண்டிருப்பது கண்டறியப்பட்டது. தொடர்ந்து அருகில் அமர்ந்திருந்த சரவணன் என்பவரை பிடித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், லாரியில் சுமார் 5 ஆயிரம் லிட்டர் பயோடீசல் உள்ளது எனவும், இதற்கு எவ்வித உரிமமோ அல்லது ஆவணங்களோ இல்லை எனவும் தெரியவந்துள்ளது. அத்துடன் இந்த டீசல் நிரப்பப்பட்ட லாரி, கரூர் நகர டவுன் காவல்நிலையத்தில் ஏட்டாக பணியாற்றும் ஒருவருக்கு சொந்தமானது தெரியவந்தது.
இதனையடுத்து எந்தவித உரிமம் இல்லாமல் கள்ளத்தனமாக டீசல் விற்பது சட்டப்படி குற்றம் என்பதால் லாரிகள் அனைத்தும் டீசலுடன் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும், கலெக்டர் பிரபுசங்கர் பறிமுதல் செய்யப்பட்ட லாரிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டுள்ளார்