காட்டு பகுதியில் அழுகிய நிலையில் பிணமாக கிடந்த காதல்ஜோடி.! காரணம் என்ன?



kattupakutiyil-pinamaga-kidantha-lovers

தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே மோப்பிரிப்பட்டியை சேர்ந்தவர் சவுரிநாதன். இவருக்கு 2 மகன்கள் மற்றும் 2 மகள்கள் உள்ளனர். அதில் ஒரு மகளான சோபியா தனியார் கல்லூரி ஒன்றில் பரதநாட்டியம் இறுதி ஆண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் சோபியா பக்கத்து வீட்டில் உள்ள ஆனந்தராஜ் என்பவரை காதலித்து வந்துள்ளார்.

இவர்களின் காதலுக்கு இரு வீட்டாரும் சம்மதம் தெரிவித்து கொரோனா பிரச்சனைக்கு பிறகு திருமணம் செய்து வைப்பதாக கூறியுள்ளனர். இந்நிலையில் இன்று காலை அரூர் அரசு மருத்துவமனைக்கு பின்புறம் உள்ள காட்டு பகுதியில் காதல்ஜோடி விஷம் அருந்தி பிணமாக கிடந்துள்ளனர்.

Karur

இதனை அவ்வழியாக சென்ற சிலர் பார்த்து அவர்களின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதனை அடுத்து இருவீட்டாரும் பிணமாக கிடந்த தங்களது பிள்ளைகளை பார்த்து கதறியுள்ளனர். காதலுக்கு சம்மதம் தெரிவித்தும் திருமணம் செய்து வைக்க கால தாமதம் ஏற்ப்பட்டதால் விரக்தியில் இந்த முடிவை காதல்ஜோடிகள் எடுத்ததாக தெரிய வந்துள்ளது.

மேலும் இச்சம்பவம் குறித்து அப்பகுதி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரனை நடந்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.