தன் வீட்டில் நடந்த மோசமான சம்பவம்.! நடிகை சீதா போலீசில் பரபரப்பு புகார்.! நடந்தது என்ன?
மாதாமாதம் பிரசாதம் பெற ரூ.1000 - மதுரை மீனாட்சி அம்மன் கோவில் பெயரில் மோசடி.. பக்தகோடிகளே உஷார்.!
வரலாறு கொண்ட மீனாட்சி அம்மன் கோவில் பெயரை வைத்து டிரஸ்ட் ஒன்று மோசடி செய்வதாக புகார் எழுந்துள்ளது.
மதுரை மாநகரில் இருக்கும் மீனாட்சி அம்மன் கோவில், உலகளவில் பிரசித்தி பெற்ற வரலாற்று பிரதிநிதித்துவம் இருக்கும் கோவில் ஆகும். இக்கோவிலுக்கு பல மாவட்டத்தினரும், இந்தியாவின் பல மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் வந்து சாமி தரிசனம் செய்துவிட்டு செல்வார்கள். அதேபோல, பாண்டிய தமிழனின் கட்டுமானங்கள் அழகை கண்டு வியந்தும் செல்வார்கள்.
மீனாட்சி அம்மன் கோவில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் இருக்கிறது. அங்கு தேவையான பணிகள், நிகழ்ச்சி நிரல்களை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில், வீட்டில் இருந்து ரூ.1000 பணம் செலுத்தினால் மாதாமாதம் அம்மனின் சிறப்பு அருட்பிரசாதம் வழங்கப்படும் என மோசடி நடந்துள்ளது.
காவேரி சேவா ட்ரிஸ்ட் பெயரில் இயங்கி வரும் முகநூல் தளத்தில், டிரஸ்ட் வங்கிக்கணக்குக்கு ரூ.1000 பணம் அனுப்பினால் மீனாட்சியின் பிரசாதம் சிறப்பு பூஜை செய்து அனுப்பி வைக்கப்படும் என விளம்பரப்படுத்தப்பட்டுள்ளது. இதனைக்கண்ட பலரும் பணம் அனுப்பி வைத்துள்ளனர்.
ஒருசிலர் மீனாட்சி அம்மன் கோவில் நிர்வாகத்திற்கு தொடர்பு கொண்டு தகவலை தெரியப்படுத்தியுள்ளார். இதனையடுத்து, அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டதில் காவேரி சேவா டிரஸ்ட் விளம்பரம் தெரியவரவே, கோவில் கண்காணிப்பாளர் ஆறுமுகம் அளித்த புகாரின் பேரில் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.