மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
காவேரி நீரால் கலைகட்டிய கல்லணை! ஆர்ப்பரிக்கும் ஆற்றில் மக்கள் உற்சாக கொண்டாட்டம்
கர்நாடகாவில் இருந்து காவேரி நீர் தமிழகத்திற்கு திறந்துவிடப்பட்டது. தற்போது காவேரி நீர் கல்லணையை கடந்து டெல்டா மாவட்டங்களுக்கு பாய்ந்து ஓடுகிறது.
தென்மேற்கு பருவமழை தீவிரமாக பெய்ததால் கேரளா கர்நாடக அணைகளில் நீர் நிரம்பியது. இதனால் மேட்டூர் அணைக்கு நீர் திறந்து விடப்பட்டது. மேட்டூர் அணையில் நீர் முழு கொள்ளளவை எட்டியதை தொடர்ந்து, சென்ற 13ஆம் தேதி தண்ணீர் திறந்துவிடப்பட்டது.
இந்த நீர் கடந்த வியாழக்கிழமை திருச்சி முக்கொம்பு வந்தடைந்தது. அதன் பிறகு, அங்கிருந்து வெள்ளிக்கிழமை இரவு 2 மணிக்கு கல்லணைக்கு வந்து சேர்ந்தது. கல்லணையில் இருந்து தண்ணீர் பாசனத்திற்க்காக நேற்று திறக்கப்பட்டது.
இந்த தண்ணீரால் டெல்டா மாவட்டத்திலுள்ள 10.5 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் பயனடையும். கல்லணையில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர், தஞ்சை, திருவாரூர், நாகை, கடலூர், பாண்டிச்சேரி வரை உள்ள விவசாய நிலங்களுக்கு பயனளிக்கும்.
இந்நிலையில் இன்று விடுமுறை நாள் என்பதால் கல்லணையை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் கல்லணையில் குவிந்தனர். பலர் ஆற்றில் குளித்தும் காவேரி தாயை வணங்கியும் வரவேற்றனர்.