திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
இராணுவ வீரரின் பர்ஸை களவாடிய திருட்டுக்கூட்டம்.. பழனிக்கே பஞ்சாமிர்தம்.. பரபரப்பு வீடியோ வெளியிட்ட அதிகாரி.!
கோவிலுக்கு வந்த இடத்தில் தனது பர்ஸை தவறவிட்ட ராணுவ வீரர் பர்சில் உள்ள பணத்தை எடுத்துவிட்டு, பர்சையாவது தன்னிடம் ஒப்படைக்குமாறு கோரிக்கை வைத்துள்ளார்.
கேரளா மாநிலத்தை சேர்ந்தவர் மனோ. இவர் ராணுவ வீரராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில், சம்பவத்தன்று மனோ திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனிக்கு வந்துள்ளார்.
அங்கு பழனி முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு வெளியே வந்த சமயத்தில், அவரின் பர்ஸ் காணாமல் போனது. இதனையடுத்து இது குறித்து காவல் நிலையத்தில் அவர் புகார் அளித்துள்ளார்.
விசாரணையில் இறங்கிய காவல் துறையினருக்கு மேற்படி விபரம் கண்டறிய இயலவில்லை. ஏனெனில் கோவிலில் இருக்கும் சிசிடிவி கேமராக்கள் வேலை செய்யாததால் மர்ம நபரின் அடையாளத்தை காணும் பணி தொய்வு ஏற்பட்டுள்ளது.
இதனால் இராணுவ வீரர் மனோ தனது பர்சில் இருக்கும் பணத்தை எடுத்து விட்டு, அதில் இருக்கும் ஆவணங்களை காவல்துறையிடம் ஒப்படைக்குமாறும், அதில் அலுவலகம் குறித்த தகவல் இருப்பதாகவும் வீடியோ வெளியிட்டு திருடர்களுக்கு கோரிக்கை வைத்துள்ளார்.