திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
கேரளத்து தம்பதிகள் பழனி விடுதியில் தற்கொலை.. ஊர்விட்டு ஊர் வந்து சோக முடிவு.!
கேரளா மாநிலத்தை சொந்தமாக கொண்டவர் சுகுமாரன். இவரின் மனைவி சத்தியபாமா. தம்பதிகள் இருவரும் சம்பவத்தன்று திண்டுக்கல்லுக்கு வருகை தந்துள்ளனர்.
பின்னர், அங்கிருந்து பழனிக்கு வந்த ஜோடி, பழனியில் உள்ள தனியார் விடுதியில் அறையெடுத்து தங்கியிருந்துள்ளது. இன்று இவர்களின் அறை நேரம் ஆகியும் திறக்கப்படாமல் இருந்துள்ளது.
இதனால் சந்தேகமடைந்த ஊழியர்கள் காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கவே, கதவை உடைத்து பார்க்கையில் தம்பதிகள் தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது.
இருவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்த காவல் துறையினர், வழக்குப்பதிவு செய்து தம்பதிகளின் தற்கொலைக்கான காரணம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.