மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
15 வயது சிறுமி குழந்தையை பெற்றெடுத்த துயரம்; காதல் பெயரில் பாஜக நிர்வாகியின் கொடூர செயல்..!
சிறுமியை காதலிப்பதாக நடித்து கர்ப்பிணியாக்கிய பாஜக நிர்வாகி கைது செய்யப்பட்டுள்ளார். அறியாத வயதில் குழந்தை பெற்றெடுத்த சிறுமியின் துயரம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு.
கேரள மாநிலத்தில் உள்ள பாலக்காடு, மலம்புழா ஆனிக்கோடு பகுதியில் வசித்து வருபவர் ரஞ்சித் (வயது 26). இவர் பாரதிய ஜனதா கட்சியின் யுவ மோர்ச்சா பிராயிரு பகுதி நிர்வாகி ஆவார்.
இதே பகுதியில் 15 வயதுடைய சிறுமி தனது பெற்றோருடன் வசித்த வந்துள்ளார். இந்நிலையில், சிறுமியை காதலிப்பதாக ஏமாற்றிய ரஞ்சித், திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி பலமுறை பாலியல் பலாத்காரம் செய்துள்ளான்.
கடந்த 2 நாட்களுக்கு முன்னதாக சிறுமி தனக்கு வயிறு வலிப்பதாக பெற்றோரிடம் தெரிவிக்கவே, மருத்துவமனைக்கு மகளை பெற்றோர் அழைத்து சென்றுள்ளனர். மருத்துவப்பரிசோதனையில் சிறுமி நிறைமாத கர்ப்பிணியாக இருப்பது உறுதியானது.
இதற்கிடையில், மறுநாளே சிறுமி குழந்தையை பெற்றெடுத்த நிலையில், தகவல் அறிந்த மலம்புழா காவல் துறையினர் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து ரஞ்சித்தை கைது செய்தனர். அவர் கட்சியில் இருந்தும் நீக்கப்பட்டார்.