பிக்பாஸ் வீட்டிற்குள் என்ட்ரியான கணவர்.! முதல் நாளே நடிகை சுஜா வருணி போட்ட பதிவு.!
கல்லூரி மாணவியை பலாத்காரம் செய்த கல்லூரி முதல்வர்.. அதிர்ச்சி சம்பவம்.. விசாரணைக்கு பயந்து தற்கொலை முயற்சி.!
நாடகப்பள்ளி முதல்வர் முதலாம் வருடம் பயின்று வந்த கல்லூரி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ததாக புகார் எழுந்த நிலையில், விசாரணைக்கு பயந்து கல்லூரி முதல்வர் தற்கொலைக்கு முயற்சித்துள்ளார்.
கேரள மாநிலத்தில் உள்ள திருச்சூரில் நாடகம் மற்றும் நுண்கலை கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில், இளங்கலை பட்டம் பயிலும் முதல் வருட மாணவி, கடந்த கொரோனா பேரலையின் போது வீட்டிற்கு செல்ல இயலாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, கல்லூரி மாணவிக்கு உதவி செய்வது போல நடித்த முதல்வர் சுனில் குமார், அவரை தனது வீட்டில் தங்க வைப்பதாக வாக்குறுதி அளித்துள்ளார்.
மேலும், சுனில் குமாரின் மனைவி மற்றொரு கல்லூரியில் பேராசிரியையாக பணியாற்றி வருவதால், மாணவியும் நம்பி கல்லூரி முதல்வரின் வீட்டில் தங்க சம்மதம் தெரிவித்துள்ளார். கடந்த ஜனவரி 21 ஆம் தேதி சுனில் குமாரின் மனைவி தனது வேலைக்கு சென்றுவிட, அன்று வீட்டில் மாணவி மற்றும் சுனில்குமார் தனியே இருந்துள்ளனர். நிலைமை தனக்கு சாதகமாக்கிய சுனில் குமார் மாணவியை மிரட்டி தனது வீட்டில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
பின்னர், இதுகுறித்து வெளியே யாரிடமும் கூறினால் கொலை செய்திடுவேன் என்று மிரட்டவே, பயந்துபோன மாணவி என்ன செய்வது என்று தெரியாமல் விழிபிதுங்கி இருக்கிறார். சுனில் குமாரின் வீட்டில் இருந்து தப்பிய சிறுமி, நண்பர்களின் உதவியுடன் சில நாட்கள் யாரிடமும் எதுவும் பேசாமல் தங்கி இருந்துள்ளார். அதனைத்தொடர்ந்து வீட்டிற்கு சென்ற கல்லூரி மாணவி, அமைதியாகவே இருந்து வந்துள்ளார்.
மீண்டும் கல்லூரிகள் திறக்கப்பட்டதும் மாணவி பெற்றோரிடமும் விஷயத்தை தெரிவிக்க வழியில்லாமல் கல்லூரிக்கே வந்த நிலையில், விரக்தியில் கடந்த சில நாட்களுக்கு முன்னதாக விஷம் குடித்து தற்கொலைக்கு முயற்சித்து இருக்கிறார். அவரை மீட்ட நண்பர்கள் மருத்துவமனையில் அனுமதி செய்துள்ளனர். மருத்துவமனையில் மருத்துவர்கள் மாணவியை காப்பாற்றியுள்ளனர். இந்த தகவலை அறிந்த சுனில் குமார் பதறியடித்து மருத்துவமனைக்கு சென்ற நிலையில், நண்பர்கள் முன்னிலையில் அரைகுறையாக மாணவி உண்மையை கூற முயற்சித்துள்ளார்.
அப்போது, அவளுக்கு மூளை குழம்பிவிட்டது என சுனில் குமார் தெரிவிக்க, கண்ணீருடன் இருந்த மாணவியை தொடர்பு கொண்ட சுனிலின் மனைவி தனது வீட்டிற்கு வருமாறு அழைத்துள்ளார். இதனால் சுனிலின் மனைவிக்கு உண்மை தெரிந்திருக்க வேண்டும் என்பதை உறுதி செய்த மாணவி, கல்லூரி முதல்வர் சுனில் குமாருக்கு எதிராக காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனால் தகவல் மாணவர்கள் மத்தியில் தெரியவரவே, சுனிலுக்கு கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும் என மாணவர்கள் கல்லூரி வளாகத்தில் பிப். 24 ஆம் தேதி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த விஷயம் தொடர்பாக காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொள்ள தொடங்க, தகவலை அறிந்துகொண்ட சுனில் குமார் தனது வீட்டில் விஷம் குறித்து தற்கொலைக்கு முயற்சித்துள்ளார். அவர் தற்போது சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்ட நிலையில், சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மருத்துவ சிகிச்சை முடிந்ததும் சுனில் குமார் கைது செய்யப்படலாம் என எதிர்பார்க்கபடுகிறது. இந்த சம்பவம் திருச்சூரில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.