மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
குழந்தை கடத்தல் வதந்தி.. மகளுடன் சென்ற தந்தைக்கு தர்ம அடி!
சென்னை ஆவடி தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் சரவணன். இவருக்கு 9 வயதில் ஒரு மகள் உள்ளார். இவர் ஆவடி தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் உள்ள அரசு பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து வருகிறார்.
இந்த நிலையில் பள்ளி முடிந்ததும் சரவணன் நேற்று முன்தினம் மாலை தனது மகளை வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார். அப்போது வீட்டிற்கு செல்லும் வழியில் மளிகை பொருட்களை வாங்கிக் கொண்டு நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது அவர்கள் சென்ற வழியில் மது போதையில் இருந்த 2 பேர், குழந்தையை கடத்தி செல்கிறாயா என சரவணனிடம் தகராறு செய்து, குழந்தையை கடத்த வந்த மர்ம நபர் என கத்தி கூச்சலிட்டுள்ளனர். இதனை கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் சரவணன் சூழ்ந்து சரமாரியாக அடித்து உதித்தனர்.
இதனிடையே சிறுமியிடம் விசாரித்தபோது அவர் என் தந்தை எனவும், பள்ளியில் இருந்து வீட்டிற்கு என்னை அழைத்து செல்வதாக கூறியுள்ளார். இதனைக் கேட்ட அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் சைலண்டாக கூட்டத்தை கலைத்து சென்றனர்.
இந்த சம்பவம் குறித்த சரவணன் ஆவடி காவல்நிலத்தில் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார் மது போதையில் தவறான தகவல்களை பரப்பிய 2 போதை ஆசாமிகளை போலீசார் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.