மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
கொடைக்கானல் போக போறிங்களா.? கட்டாயம் இதை தெரிஞ்சிக்கோங்க.!
வழக்கத்திற்கு மாறாக இந்த வருடம் கோடை வெயில் மிக அதிகமாக கொளுத்துகிறது. எனவே, கொடைக்கானல், ஊட்டி, ஏற்காடு போன்ற சுற்றுலா தலங்களில் மக்களின் வருகை அதிகரித்து இருக்கிறது. இதன் காரணமாக அந்த நகரங்கள் மிகவும் கூட்ட நெரிசலில் சிக்கி தவிக்கிறது.
இந்த கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த இ பாஸ் முறையை அரசு நடைமுறைப்படுத்த இருக்கிறது. வரும் மே 7ஆம் தேதி முதல் கொடைக்கானல், ஊட்டி உள்ளிட்ட சுற்றுலா தலங்களில் பதிவு செய்த பின்னர் தான் சுற்றுலா பயணிகள் அங்கு நுழைய முடியும். இதன் காரணமாக, சுற்றுலா பயணிகளின் வருகை குறையும் என அந்த நகரங்களின் வணிகர்கள் அச்சத்தில் இருக்கின்றனர்.
கொடைக்கானல் பகுதியில் பயணிகளுக்கு தங்க அனுமதியும், உணவும் வழங்க மாட்டோம் என ஓட்டல் உரிமையாளர்கள் முடிவு எடுத்துள்ளனர். இது குறித்த அறிவிப்பை அவர்கள் வெளியிட்டு இருப்பதால் சுற்றுலா பயணிகள் மிகுந்த நெருக்கடிக்கு ஆளாகி இருக்கின்றனர்.