மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
கரையை உடைத்துக்கொண்டு ஆட்பறித்து ஓடும் வெள்ளம்: பதைபதைப்பு வீடியோ வைரல்.!
இலங்கையை ஒட்டி நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தென் தமிழகத்தில் உள்ள திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் அதி கனமழையானது பெய்துள்ளது.
மதுரை, விருதுநகர், தேனி, சிவகங்கை, இராமநாதபுரம் உட்பட பல மாவட்டங்களில் கனமழையும் பெய்து வருகிறது. இதனால் திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்கள் வெள்ளத்தின் பிடியில் சிக்கி மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது.
பல இடங்களில் குளங்கள் நிரம்பி ஊருக்குள் நீர் புகுந்துள்ளது. இந்நிலையில் தூத்துக்குடியில் உள்ள கோரம்பள்ளம் பகுதியில் இருக்கும் குளம் உடைந்து நீர் ஆர்ப்பரித்து வெளியேறும் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன.
கோரம்பள்ளம் குளம் உடைந்து தூத்துக்குடியை நகரப்பகுதியை நோக்கி நீர் வருவதாக தகவல்...
— Vedhavalli (@vedhavalli_13) December 18, 2023
மக்கள் எச்சரிக்கை..#Tirunelveli #TirunelveliRains #ThoothukudiRains pic.twitter.com/SD3GMOqLcT
இந்த வெள்ள நீரானது தூத்துக்குடி நகரை நோக்கி வருவதால் மக்கள் கவனமாக இருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.