மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அடப்பாவமே.. நாய்கள் பண்ணையில் ஏற்பட்ட தீ விபத்து..! 13 நாய்கள் பரிதாப பலி..!!
கோவை மாவட்டத்தில் உள்ள வடவள்ளி கருப்பராயன் கோவில் அருகே விற்பனைக்காக நாய்கள் வளர்த்து வந்தனர். சனிக்கிழமையன்று எதிர்பாரமாதமாக ஏற்பட்ட தீ விபத்தில் 13 நாய்கள் தீயில்கருகி உயிரிழந்தன.
பின் இதுதொடர்பாக காவல்துறையினருக்கு தகவல் தெரியவரவே, சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் விசாரணை நடத்தினர். விசாரணையில், இந்த கொட்டிலை பாபு என்ற நபர் நடத்திவந்தது தெரியவந்தது.
மேலும் அவர்மீது நடவடிக்கை எடுக்க கோரி இந்திய விலங்குகள் நலவாரியத்தில் கௌரவ விலங்குகள் நலப்பிரதிநிதி பிரதீப் பிரபாகரன் வடவள்ளி காவல்துறையிடம் புகார் அளித்துள்ளார்.
இந்த புகாரின் பேரில் வடவள்ளி இன்ஸ்பெக்டர் லெனின் அப்பாதுரை, வன்கொடுமை தடுப்பு பிரிவு (ஜி) விலங்குகளை கொடூரமாக நடத்துதல், உரிமையாளராக இருப்பது, பயிற்சி செய்வதை புறக்கணித்தல் உள்ளிட்ட வழக்குகளின் கீழ் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் கருகிய நாய்களின் உண்மையான எண்ணிக்கையை கொட்டில் உரிமையாளரிடம் விசாரணை நடத்தினால் தெரியும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.