மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
வீட்டில் தனியாக இருந்த பெண்.. திடீரென கேட்ட சத்தம்.. அக்கம்பக்கத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி.!
கோவை மாவட்டம் சூலூர் அருகே வசித்து வரும் 23 வயது இளம்பெண் 8 ஆண்டுகளாக மனநிலை பாதிக்கப்பட்டு இருந்துள்ளார். இவர் சம்பவ தினத்தில் தனது வீட்டில் தனியாக இருந்தார். அப்போது ஜே.கிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்த மரிய ராஜா என்ற 42 வயது கூலி தொழிலாளி அவர்களது வீட்டில் அத்துமீறி நுழைந்துள்ளார்.
பெண்ணின் உடைகளை கலைந்து அவரை பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சித்துள்ளார். தொழிலாளியின் செயலை கண்டு அதிர்ச்சி அடைந்த பெண் உடனடியாக கத்தி கூச்சமிட்டார். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து மரியராஜாவை பிடித்து கடுமையாக அடித்து உதைத்தனர்.
பின்னர் இது பற்றி போலீசுக்கு தகவல் கொடுத்தனர். விரைந்து வந்த போலீசார் குற்றவாளி மரிய ராஜாவை கைது செய்தனர். தொடர்ந்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்துள்ளனர். வீட்டில் தனியே இருந்த மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை அத்துமீறி பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.