டிடிவி தினகரன் போட்ட கணக்கு வீண்போகவில்லை.! வெளியான முக்கிய கருத்து கணிப்பு.! கடும் பீதியில் அதிமுக அமைச்சர்?
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கோவில்பட்டி தொகுதியில் தற்போது போட்டியிடுகிறார். 2017ம் ஆண்டு இடைத்தேர்தலில் தனக்கு வெற்றி வாய்ப்பை பெற்றுத்தந்த ஆர்.கே. நகரை விடுத்துவிட்டு இவர் இங்கு போட்டியிட காரணம் என்ன என பலருக்கும் கேள்வி எழுந்தது. அதற்க்கு கோவில்பட்டியில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் அக்கட்சிக்கு கிடைத்த வரவேற்ப்பு தான் காரணம் என கூறப்படுகிறது.
அப்பகுதியில், அமமுக 13 கவுன்சிலர்களை இங்கே கொண்டுள்ளது. அதிமுகவிற்கு 1ம் திமுகவிற்கு 2 கவுன்சிலர்களும் தான் உள்ளனர். கடந்த மக்களவைத் தேர்தலில் அமமுக வேட்பாளர், இந்ந்த தொகுதியின் சட்டமன்றப் பிரிவில் சுமார் 20,000 வாக்குகளைப் பெற்றிருப்பதால், கோவில்பட்டியை தினகரன் தேர்ந்தெடுத்ததாக கூறப்படுகிறது.
கோவில்பட்டி தொகுதியில், தினகரனுக்கு எதிராக அதிமுக சார்பில் தற்போதைய அதிமுக எம்.எல்.ஏ மற்றும் அமைச்சருமான கடம்பூர் ராஜூ போட்டியிடுகிறார். இந்தநிலையில், தமிழகத்தில் எந்த கட்சி, எந்த தொகுதியில் வெற்றி பெறும் என்பது குறித்து மாலை முரசு தொலைக்காட்சி கருத்துகணிப்பு நடத்தி வெளியிட்டு வருகிறது.
இந்தநிலையில், நேற்றும் இன்றும் திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, புதுக்கோட்டை, மதுரை, விருதுநகர், தேனி உள்ளிட்ட தென்மாவட்டங்களில் 52 தொகுதிகளுக்கு நடத்திய கருத்துக்கணிப்பை வெளியிட்டது. அதில், திமுக கூட்டணி 34 இடங்களில் வெல்லும் என்றும், அதிமுக கூட்டணி 11 இடங்களில் வெல்லும் என்றும் குறிப்பிட்டுள்ளது. அமமுக ஒரு இடத்தில் வெல்லும் என்றும் திமுக-அதிமுக இடையே ஆறு இடங்களில் இழுபறி நீடிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அப்பகுதியில், அமமுக வெல்லும் ஒரு இடம் கோவில்பட்டி எனவும், இங்கு தினகரனுக்கு 34 சதவீதம் ஆதரவு உள்ளதாகவும், அதற்கு அடுத்தபடியாக அதிமுக அமைச்சர் கடம்பூர் ராஜூவிற்கு 29 சதவீதம் வாய்ப்பு உள்ளதாகவும், திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கட்சி வேட்பாளர் சீனிவாசனுக்கு 24 சதவீதம் வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.