திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
#Breaking: சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்; சோதனைகள் தீவிரம்.. காவல்துறை குவிப்பு.!
சென்னையில் உள்ள கோயம்பேடு பேருந்து நிலையம், ஆசியாவிலேயே மிகப்பெரிய பேருந்து நிலையம் ஆகும். இங்கிருந்து தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டத்திற்கும் பேருந்து போக்குவரத்து சேவை வழங்கப்பட்டு வருகிறது. அதேபோல, ஆந்திரா, கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலத்திற்கும் கோயம்பேடு பேருந்து நிறுத்தத்தில் இருந்து பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
இந்நிலையில், இன்று காலை 10 மணியளவில் கோயம்பேடு காவல்துறை அதிகாரிகளுக்கு தொடர்பு கொண்ட மர்ம நபர், கோயம்பேடு பேருந்து நிறுத்தத்தின் 1ம் நடைமேடையில் வெடிகுண்டு இருக்கிறது. இது 11 மணியளவில் வெடிக்கும் என கூறி அழைப்பை துண்டித்துள்ளார்.
இதனைக்கேட்டு அதிர்ந்துபோன அதிகாரிகள் உடனடியாக கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு விரைந்து மோப்ப நாய்கள் உதவியுடன் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். இதனால் மக்களும் லேசான பீதிக்கு உள்ளாகி இருக்கின்றனர். கோயம்பேடுக்கு வருகை தரும் பொதுமக்களின் உடமைகள் சோதனை செய்யப்பட்டு வருகின்றன.
வெடிகுண்டு எச்சரிக்கை விடுத்த நபரின் செல்போன் அரும்பாக்கத்தில் இருந்து ஆன் செய்யப்பட்டு, பின் பெரும்பாக்கம் வரை சென்று சுவிட்ச் ஆப் ஆகியுள்ளது. இதனால் மர்ம நபரையும் அதிகாரிகள் தேடி வருகின்றனர்.