திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
கள்ளக்காதல் இன்பத்துக்காக 9 மாத பெண் குழந்தையை கொலை செய்த 21 வயது இளம் தாய்.. 2 வயது சிறுவனின் உயிர் ஊசல்..! நெஞ்சை பதறவைக்கும் சோகம்.!!
கணவனின் கண்டிப்பை மீறியும் தனது கள்ளக்காதல் மீது மோகம் கொண்ட பெண்மணி, உல்லாசத்துக்கு இடையூறாக இருக்கும் குழந்தையை கொலை செய்த பயங்கரம் நடந்துள்ளது. வாழவேண்டிய வயதில் வாழ்க்கையை தொலைத்த 21 வயது பெண்ணின் ஆசையால் சிறைக்குள் வாழ்க்கை முடியப்போகும் துயரம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ராயக்கோட்டை, போடம்பட்டி பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளி மாதேஷ் (வயது 27). இவரின் மனைவி ஞான மலர் (வயது 21). தம்பதிகளுக்கு 2 வயதுடைய மகன், 9 மாத பெண் குழந்தை இருக்கின்றனர். இந்த நிலையில், ஞான மலருக்கும், ஆவூரில் வசித்து வரும் விவசாயி தங்கராஜ் (வயது 28) என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த பழக்கமானது இருவருக்கும் இடையே கள்ளத்தொடர்பாக மாறவே, இருவரும் தனிமையில் உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். இந்த தகவல் மாதேஷுக்கு தெரியவரவே, அவர் மனைவியை கண்டித்து இருக்கிறார். ஆனால், அவர் அதனை கேட்காமல், கணவருக்கு விஷயம் தெரிந்துவிட்டது என கள்ளக்காதலன் தங்கராஜிடம் தெரிவித்துள்ளார்.
மேலும், தனது குழந்தைகளே கள்ளக்காதலுக்கு இடையூறாக இருப்பதாகவும் கூறியுள்ளார். இதனையடுத்து, கள்ளகாதலனின் திட்டப்படி ஞானமலர் தனது 2 குழந்தைகளுக்கும் சாப்பிட எலி பேஸ்ட் கொடுத்துள்ளார். இதனை சாப்பிட்ட குழந்தைகள இருவரும் வாந்தி எடுத்து மயங்கி விழுந்துள்ளனர். பின்னர், அக்கம் பக்கத்தினர் கேட்டபோது, விசாரணைக்கு பயந்து ஞானமலரும் விஷம் குடித்துள்ளார்.
இதனையடுத்து, 3 போரையும் மீட்ட அக்கம் பக்கத்தினர், அவர்களை சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் அனுமதி செய்தனர். அதில், 9 மாத பெண் குழந்தை உயிரிழந்துவிட, ராயக்கோட்டை காவல் துறையினர் ஞானமலர், அவரின் கள்ளக்காதலன் தங்கராஜ் ஆகியோரை கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளனர்.
கள்ளக்காதல் கேடுதரும்..