26 பேரின் உடல்நலக்குறைவுக்கு காரணமான தனியார் உணவகம் சில நாட்களில் மீண்டும் திறப்பு: அதிர்ச்சியில் கிருஷ்ணகிரி மக்கள்.!



Krishnagiri Fastfood Shop Reopen Govt Official Seized After 26 Ill Eating Food 

 

கிருஷ்ணகிரியில் இருக்கும் கே தியேட்டர் எதிர்ப்புறம், சக்தி ஃபாஸ்ட் ஃபுட் கடை செயல்பட்டு வந்தது. சம்பவத்தன்று குருபரப்பள்ளி சிப்காட் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் தொழிற்சாலையில் வேலை பார்த்துவரும் வட மாநில தொழிலாளர்கள், சிக்கன் ரைஸ் பார்சல் வாங்கி சென்று சாப்பிட்டுள்ளார். 

இந்நிலையில், 26 பேருக்கு வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டுள்ளது. அவர்கள் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், மறுநாளில் கிருஷ்ணகிரி நகராட்சி ஆணையர் வசந்தி தலைமையிலான அதிகாரிகள் கடைக்கு சீல் வைத்தனர். 

இந்நிலையில், தற்போது மீண்டும் அந்த கடை திறக்கப்பட்டுள்ளது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விஷயம் குறித்து மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அலுவலர் வெங்கடேசன் கூறுகையில், "சீல் வைக்கப்பட்ட சக்தி ஃபாஸ்ட் ஃபுட் கடைக்கு எங்களின் தரப்பில் அனுமதி ஏதும் தரப்படவில்லை. 

அக்கடை தொடர் கண்காணிப்பின் கீழ் வைக்கப்பட்டுள்ளது. உணவு மாதிரிகள் சேகரிக்கப்படும்" என தெரிவித்தார்.