மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
சிறுமியை கடத்தி வந்து குடும்பம் நடத்திய இளைஞர் போக்ஸோவில் கைது; அசாமுக்கு பார்சல் செய்யும் அதிகாரிகள்.!
14 வயது சிறுமியை கடத்தி வந்து குடும்பம் நடத்திய அசாம் மாநில இளைஞர் ஓசூரில் கைது செய்யப்பட்டார்.
அசாம் மாநிலத்தில் உள்ள காம்ரூப் மாவட்டம், பகுருதியா பகுதியில் வசித்து வருபவர் அப்துல் வாகா (வயது 23). இவர் அப்பகுதியில் வசித்து வரும் 14 வயது சிறுமியை காதலித்து வந்துள்ளார். சிறுமி அங்குள்ள பள்ளியில் 10ம் வகுப்பு பயின்று வந்த நிலையில், காதல் வலையில் விழுந்துள்ளார்.
இந்த நிலையில், சிறுமியிடம் ஆசைவார்த்தை கூறிய அப்துல், அவரை கடத்தி ஓசூருக்கு வந்துள்ளார். அங்கு இருவரும் திருமணம் செய்துகொண்டு குடும்பம் நடத்தி வந்துள்ளனர். ஒசூரில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் அப்துல் பணியாற்றி வந்துள்ளார்.
மகளை காணாத பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, புகாரை ஏற்ற காவல் துறையினர் நடத்திய விசாரணையில் காதல் விவகாரம் மற்றும் திருமணம் தெரியவந்துள்ளது.
இதனையடுத்து, ஓசூருக்கு விரைந்த அசாம் காவல் துறையினர், உள்ளூர் காவல் துறையினருக்கு தகவலை தெரிவித்து சிறுமியை மீட்டனர். மேலும், அப்துல் வாகாவை கைது அசாமுக்கு அழைத்து செல்ல ஆணை பெற்றனர். சிறுமிக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.