மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
சாலைவசதி இல்லையென்று கூறி தாய், சேயை நடுக்காட்டில் இறக்கிவிட்டு சென்ற அவசரஊர்தி ஓட்டுநர்.!
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூர், கோடகரை கிராமத்தில் வசித்து வரும் 27 வயது பழங்குடியின பெண், தனது 4-ம் பிரசவத்திற்காக ஓசூர் அரசு மருத்துவமனையில் கடந்த 8-ம் தேதி அனுமதி சியப்பட்டார். அவருக்கு 10-ம் தேதியில் கருத்தடை அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. பின் நேற்று மதியம் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
தாயும், சேயும் அரசு அவசர ஊர்தியில் அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், உனிசெட்டி கிராமத்திற்கு சென்ற அவசர ஊர்தி ஓட்டுநர் சாலை வசதியை மேற்கொள்காண்பித்து இருவரையும் நடுக்காட்டில் இறக்கிவிட்டு சென்றுள்ளார். இதனால் பச்சிளம் குழந்தையுடன் தவித்த பெண் உறவினர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
அவர்கள் மருத்துவமனை நிர்வாகத்திற்கு தொடர்பு கொண்டு பேசியபின், இரவு 7 மணிக்கு அவசர ஊர்தி அனுப்பி வைக்கப்பட்டது. அதன் மூலமாக தாயும், சேயும் ஊருக்கு சென்றனர். மேற்கூறிய சர்ச்சை செயலை செய்த ஓட்டுனரை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.