மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பழிக்குப்பழி.. அண்ணனை கொலை செய்தவன் வெளியே வந்த அதே நாளில் கொலை; மறைந்த திமுக பிரமுகரின் தம்பி பயங்கரம்..!
திமுக பிரமுகரான அண்ணனின் கொலையில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியை தம்பி படுகொலை செய்த சம்பவம் நடந்துள்ளது. அண்ணனின் கொலைக்கு பழிதீர்க்க நடந்த பயங்கரம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூர், அந்திவாடி பகுதியை சேர்ந்தவர் முரளி. இவர் கூலித்தொழிலாளி ஆவார். சம்பவத்தன்று ஓசூர் பெத்தகொள்ளு பகுதியில் முரளி வெட்டிப்படுகொலை செய்யப்பட்டு பிணமாக இருந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல் துறையினர், நிகழ்விடத்திற்கு விரைந்து அவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து நடைபெற்ற விசாரணையில் அண்ணனின் கொலைக்கு பழிவாங்க தம்பி நடத்திய சம்பவம் அம்பலமானது. அந்திவாடியை சேர்ந்த ரியல் எஸ்டேட் தொழிலதிபர் உதயகுமார். இவர் திமுக பிரமுகரும் ஆவார். கடந்த பிப்ரவரி மாதம் உதயகுமார் வெட்டிப்படுகொலை செய்யப்பட்டார். இவ்வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்பட்ட முரளி சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
அதனைத்தொடர்ந்து, ஜாமின் பெற்று வெளியே வந்த முரளியை, அன்றைய நாளே பழிதீர்க்க எண்ணிய உதயகுமாரின் தம்பி சரவணன் தனது கூட்டாளிகளோடு சேர்ந்து பழிதீர்த்து அம்பலமானது. இதனையடுத்து, சரவணன் மற்றும் அவனது கூட்டாளிகள் 8 பேரை கைது செய்த அதிகாரிகள் சிறையில் அடைத்தனர். இவர்களிடம் இருந்து வீச்சரிவாள், இருசக்கர வாகனம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.