மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
முட்புதரில் வீசப்பட்ட சடலம்.. அண்ணியுடன் கள்ளக்காதல் கொண்ட இளைஞருக்கு நேர்ந்த பயங்கரம்.!
ஊரில் அண்ணியுடன் கள்ளக்காதல் வைத்திருந்த நபரை தமிழகத்திற்கு அழைத்து வந்து கொலை செய்த பயங்கரம் நடந்துள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூர் - பாகலூர் சாலையில் இருக்கும் உலியாளம் கிராமத்தில் நடைபெறும் கட்டுமான பணியில் தொழிலாளர்கள் பல்வேறு ஊர்களில் இருந்து வந்து பணியாற்றி செல்கின்றனர். இங்கு பீகார் மாநிலம் மொஜாப்பூர் மாவட்டத்தில் வசித்து வரும் சிவிஜிகுமார் (வயது 22), பங்காஜு பசுவான் (வயது 25) ஆகியோர் ஒப்பந்த பணியாளர்களாக இருக்கிறார்கள். இவர்களை தேன்கனிக்கோட்டையை சேர்ந்த ஒப்பந்ததாரர் ஜெயக்குமார் (வயது 27) பணிக்கு அமர்த்தியுள்ளார்.
இவர்களுக்கு அப்பகுதியில் அறை எடுத்துக்கொடுக்கப்பட்டுள்ளதால், இருவரும் அங்கேயே தங்கி இருக்கின்றனர். இதற்கிடையில், நேற்று அதிகாலை 02:30 மணியளவில் சிவிஜிகுமார் ஜெய்குமாருக்கு தொடர்பு கொண்டு பங்காஜூவை காணவில்லை என்று கூறியுள்ளார். இதனால் ஜெயக்குமார் விரைந்து சென்று விசாரித்து, பங்காஜூவை தேடியுள்ளார். அப்போது, பங்காஜு அருகே இருக்கும் முட்புதரில் இருந்து சடலமாக மீட்கப்பட்டார்.
பின்னர், இதுகுறித்து பாகலூர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்படவே, சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் பங்காஜூவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்த விசாரணையில், கள்ளகாதலால் கொலை நடந்தது உறுதியானது. அதாவது, பீகாரில் இருக்கும் சிவிஜிகுமாரின் ஆணியோடு பங்காஜூவுக்கு கள்ளக்காதல் தொடர்பு இருந்து வந்துள்ளது.
இந்த விஷயத்தை அறிந்த சிவிஜிகுமார் பங்காஜூவை கண்டித்த நிலையில், இவர்களுக்குள் முன்விரோதம் ஏற்பட்டுள்ளது. கடந்த 3 நாட்களுக்கு முன்பு சிவிஜிகுமார் பங்காஜூவை ஓசூருக்கு வேலைக்காக அழைத்து வந்துள்ளார். அப்போது, நேற்று இருவருக்கிடையே மீண்டும் தகராறு ஏற்பட, ஆத்திரமடைந்த சிவிஜிகுமார் பங்காஜூவின் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார். பின்னர், உடலை முட்புதரில் வீசிவிட்டு ஜெய்குமாருக்கு போனில் தொடர்பு கொண்டு பிதற்றி இருக்கிறார்.
கொலைக்கான உண்மை காரணம் மற்றும் குற்றவாளியை அறிந்த காவல் துறையினர், சிவிஜிகுமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.