திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
23 வயதுக்குள் 3 திருமணம்; பெண்களை வலைவீசி ஏமாற்றும் இளைஞன்.. மனைவி எடுத்த அதிரடி முடிவு.!
கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள சூளகிரி, உத்தனபள்ளி சின்ன லட்சுமிபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆஞ்சப்பா. இவரின் மகன் கார்த்திக் (வயது 23), ஜேசிபி எந்திர ஓட்டுனராக பணியாற்றி வருகிறார்.
உத்தனபள்ளி பகுதியைச் சார்ந்த இளம்பெண் ஒருவருடன் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இவருக்கு திருமணம் நடைபெற்று முடிந்துள்ளது. தற்போது இருவருக்கும் ஆறு மாத குழந்தை இருக்கிறது.
இந்நிலையில், முதல் மனைவிக்கு தெரியாமல் அதே பகுதியைச் சேர்ந்த மற்றொரு பெண்ணை கார்த்திக் திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வந்த நிலையில், சமீபத்தில் விவசாய வேலைக்கு செல்லும் பெண் ஒருவரையும் கோவிலில் வைத்து தாலி கட்டி திருமணம் செய்துள்ளார்.
தனது கணவரின் லீலைகள் குறித்து அறிந்து கொண்ட பெண்மணி, பிற மூன்று பெண்களுக்கும் விபரத்தை தெரிவித்துள்ளார். இதனையடுத்து பாதிக்கப்பட்ட மூன்று பெண்களும் பெற்றோருடன் உத்தனபள்ளி காவல் நிலையத்திற்கு சென்ற புகார் அளிக்கவே, அவர்கள் விசாரணை நடத்தி கார்த்திகை கைது செய்தனர்.