மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
சாலையை கடக்க முயன்றவருக்கு ஏற்பட்ட பரிதாபம்... இருசக்கரவாகனம் மோதி சம்பவ இடத்திலேயே பரிதாப பலி..!
சாலையை கடக்க முயன்றவரின் மீது எதிர்பாராதவிதமாக இருசக்கர வாகனம் மோதி உயிரிழந்த சோகம் நிகழ்ந்துள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள மத்தூர் அருகே அத்திக்கானூர் பகுதியைச் சேர்ந்தவர் எல்லப்பன். இவர் தனது வீட்டின் அருகே உள்ள சாலையை நேற்று கடக்க முயன்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக அந்த வழியாக வந்த இரு சக்கர வாகனம் எல்லப்பன் மீது வேகமாக மோதியுள்ளது.
இதில் பலத்த காயமடைந்த எல்லப்பனை அருகிலிருந்தவர்கள் உடனடியாக மீட்டு சிகிச்சைக்காக மத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில், அவரை பரிசோதித்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே அவர் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக மத்தூர் காவல்துறையினர் bவழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.